என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
  X

  கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சூரிய உதயத்தை காண கடற்கரையில் கூடியிருந்தவர்களை படத்தில் காணலாம்.

  விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சபரிமலைஅய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளதால் கூட்டம் மேலும் அதிகரித்து உள்ளது.
  • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

  கன்னியாகுமரி:

  சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சபரிமலைஅய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளதால் கூட்டம் மேலும் அதிகரித்து உள்ளது.

  இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமா கும் காட்சியை அவர்கள் பார்த்து ரசித்தனர்.

  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் தரிசனத்துக் காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதன் பின்னர் அவர்கள் படகில்சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

  மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீ சாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீ சாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த னர்.

  Next Story
  ×