என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆரல்வாய்மொழி அருகே அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிகள்- கிரேன்களில் இருந்த ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை
  X

  பொருட்கள் திருடப்பட்ட லாரி 

  ஆரல்வாய்மொழி அருகே அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிகள்- கிரேன்களில் இருந்த ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கன்னியாகுமரி:

  குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 40).

  இவர் கிரேன்கள், லாரிகள் மற்றும் டிரில்லர்கள் வைத்து தொழில் செய்து வருகிறார்.இதற்காக குமாரபுரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அலுவலகம் அமைத்து உள்ளார்.

  அந்த இடத்திலேயே தனது லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது வழக்கம். நேற்று அங்கு கிரேன், லாரிகள் மற்றும் 2 டிரில்லர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

  இந்த நிலையில் நேற்று இரவு யாரோ மர்மநபர்கள் அங்கு புகுந்துள்ளனர். அவர்கள் 2 டிரில்லர் மற்றும் லாரியின் பெட்டி பூட்டுகளை உடைத்து அதில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

  இன்று காலை அலுவலகம் வந்தவர்கள், கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக அலுவலகம் வந்தார்.

  லாரி மற்றும் டிரில்லர்களில் இருந்த 5 பேட்டரிகள், உபகரணங்கள் மற்றும் ஜாக்கிகள் திருட்டு போயிருப்பதாக ஆரல்வாய்மொழி போலீசில் அவர் புகார் கொடுத்தார். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

  அதன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர். துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×