என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- முந்திரி ஆலை சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்தார்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட திக்குறிச்சி சேம்புவிளை பகுதியை சேர்ந்தவர் பிபின் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி வெலிகல் அருகே முந்திரி ஆலை சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவரை பரி சோதித்துப் பார்த்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






