என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்வதிபுரத்தில் கார்கள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
    X

    இரண்டு கார்களும் சேதம் அடைந்துள்ளதை படத்தில் காணலாம் 

    பார்வதிபுரத்தில் கார்கள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு

    • மேம்பாலத்தின் கீழ் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக சிறிது நேரம் திருப்பி விடப்பட்டது.
    • போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை

    நாகர்கோவில்:

    பார்வதிபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று மதியம் கார் ஒன்று வந்தது. மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் வந்த போது டிரைவர் காரை மெதுவாக ஓட்டி சென்றார். இதையடுத்து பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார்.

    அதனால் பின்னால் வந்த காரும் நின்றது.ஆனால் அதன் பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக முன்னால் நின்ற கார் மீது மோதியது.மோதிய வேகத்தில் அந்த கார் பஸ்மீது மோதி நின்றது. இதில் இரண்டு கார்களும் சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதையடுத்து போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் கீழ் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக சிறிது நேரம் திருப்பி விடப்பட்டது.

    Next Story
    ×