search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரர்
    X

    கோப்பு படம் 

    தக்கலை அருகே காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரர்

    • திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண்
    • ஆசைக்கு இணங்காததால் தொடர்பை துண்டித்ததாக போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பந்திவெட்டான் பாறவிளை பகுதியைச் சேர்ந்த 24 வயது எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் தக்கலை தாரோடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுபின் (27) என்பவருக்கும் சமூக வலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காதலன் சுபின் சரியாக பேச வில்லையாம். பட்டதாரி பெண் போன் செய்தாலும் எடுக்காமல் துண்டித்துள்ளார். இதனால் சுபின் பற்றி விசாரித்த போது அவருக்கு வேறு ஓரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதும், 23-ந் தேதி (இன்று) திரும ணம் நடக்க உள்ளதும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பட்டதாரி பெண், நேற்று மாலை தக்கலை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை சுபின் திருமணம் செய்ய உள்ளதாக அவர் தெரி வித்தார். இது தொடர்பாக தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சுபின் வீட்டுக்குச் சென்று விசா ரணை நடத்தினர். அப்போது காதல் விவகாரம் உண்மை தான் என தெரிய வந்தது. இதனால் சுபின் திருமணம் தடை பட்டது.

    இது தொடர்பாக பட்டதாரி பெண் போலீசில் கொடுத்த புகாரில், கடந்த 3½ ஆண்டுகளாக நானும் சுபினும் காதலித்து வந்தோம். விடுமுறை கிடைக்கும் போது நேரில் சந்தித்து பேசுவோம். சில மாதங்களுக்கு முன்பு அவர் உல்லாசமாக இருக்க விரும்பினார்.

    ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. அதன் பிறகு சுபின் நடவடிக்கை யில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் பேசுவதை தவிர்த்தார். நான் போன் செய்தாலும், இணைப்பை துண்டித்தார். மேலும் சில நாட்களாக அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது.

    நண்பர்கள் மூலம் விசாரித்த போது, சுபினுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வேறு வழியின்றி புகார் கொடுக்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

    புகார் கூறப்பட்டுள்ள சுபின், தற்போது சென்னையில் பணியில் உள்ளார். திருமணத்திற்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். திருமணம் தடை ஆனதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரிடமும் பட்டதாரி பெண்ணிடமும் போலீசார் பேசி வருகின்றனர்.

    Next Story
    ×