search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் பொங்கல் விழா
    X

    கோப்பு படம் 

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் பொங்கல் விழா

    • சுற்றுலாத்துறை சார்பில் 14-ந்தேதி நடக்கிறது
    • கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் சுற்றுலா விழா கன்னியாகுமரி அருகே உள்ள கிராமப்புறங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று பொங்கல் இடும் நிகழ்ச்சியை காண செய்வார்கள்.

    அப்போது கிராமப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா வருகிற 14-ந்தேதி காலை 6 மணிக்கு கொட்டாரம் அருகே உள்ள சந்தையடி கிராமத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி சேலை அணியச் செய்து அந்த கிராமத்துக்கு சுற்றுலாத் துறையினர் அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பானைகளில் கிராம மக்கள் பொங்கல் இடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒரே இடத்தில் 100 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அப்போது ஆர்வமிகுதி யால் ஒருசில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொங்கல் பானையில் பொங்கல் இடுவார்கள். கரும்புகளை கடித்து ருசிப்பார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகுட ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறு கின்றன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தலையில் கரகம்எடுத்து ஆடுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி மற்றும் சுற்றுலா துறையினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×