என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடன்குடியில் நுங்கு, கம்பங்கூழ் விற்பனை நடக்கும் காட்சி.
உடன்குடி பகுதியில் கம்பங்கூழ், நுங்கு விற்பனை தீவிரம்
- உடன்குடி பஜார் பகுதியில் வீதிவீதியாக பதனீர், கம்பங்கூழ், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.
- இளநீர் ரூ.25-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது.
இதனால் வீட்டுக் குள்ளே மக்கள் முடங்குகின்றனர். அவசர தேவைக்கு மட்டும்தான் வெளியில் வருகின்ற னர். இதனால் உடன்குடி பஜார் பகுதியில் வீதிவீதியாக பதனீர், கம்பங்கூழ், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினசரி காலையில் பதனீர் ஒரு லிட்டர் ரூ.80-க்கும் கம்பங்கூழ் ஒரு டம்ளர் ரூ.20-க்கும், நுங்கு ரூ.10-க்கும், இளநீர் ரூ.25-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர கரும்பு சாறு, எலுமிச்சை ஜூஸ், பழ ஜூஸ் என்று வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பொருட்களை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
Next Story






