என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே  கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்து பேசிய போது எடுத்த படம்.


    சிவகிரி அருகே கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

    • கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு திருவிழா விக்டோரியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
    • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு திருவிழா தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் அறிவுரையின்படி, வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம் தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தென்மலை கிராமத்தில் விக்டோரியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

    சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் பொது மருத்துவம், சிறப்பு மருத்துவம், சித்தா மருத்துவம், ரத்த பரிசோதனை, ஆய்வக பரிசோதனை, இ.சி.ஜி., கண் பரிசோதனை உட்பட்ட அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, சிகிச்சையின் பேரில் மேல் பரிந்துரை, மேலும் டெங்கு விழிப்புணர்வுக்காக டெங்கு கண்காட்சி, நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க ப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள் இயற்கை காய்கறிகள், கீரை வகைகள், தானிய வகைகள், சத்து மாவு, கொலுக்கட்டை ஆகியவற்றை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு திருவிழா நடத்தப்பட்டது. துணை இயக்குநர் வெள்ளைச்சாமி (காசநோய்) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வளைகாப்பு பொருட்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார். கலந்து கொண்ட அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் மயில்வாகணன் மற்றும் மருத்துவமனை பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×