என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகராட்சி கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்த போது எடுத்தபடம்.
கடையநல்லூர் நகராட்சி கூட்டம்
- கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் மொத்தம் 40 தீர்மானம் வாசித்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மொத்தம் 40 தீர்மானம் வாசித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்கள் குறித்தும் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகமது அலி, யாசருக்கான், அலி அக்பர், சுந்தர மகாலிங்கம், சுபா ராஜேந்திர பிரசாத் மாரி, முருகன், முகைதீன் கனி, சங்கரநாராயணன், அரபா வஹாப் ஆகியோர் பேசினர்.
Next Story






