என் மலர்
காஞ்சிபுரம்
கூடுவாஞ்சேரியை அடுத்த காரணைபுதுச்சேரி, காட்டூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் மீனாட்சி.
நேற்று காலை இவரது மகன் வேலைக்கு சென்று விட்டார். மீனாட்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 வாலிபர்கள் கதவை தட்டி தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக மீனாட்சி கதவை திறந்து வைத்து வீட்டுக்குள் சென்றார். திடீரென 3 வாலிபர்களும் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி நகை - பணம் கேட்டனர். மீனாட்சி கொடுக்க மறுத்ததால் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
பின்னர் கொள்ளை கும்பல் மீனாட்சி அணிந்து இருந்த 2½ பவுன் நகை, பீரோவில் இருந்து 6½ பவுன் நகையை எடுத்து தப்பி சென்று விட்டனர்.
அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த மீனாட்சியை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூருக்கு செல்லவிருந்த 27 பேரிடம் இருந்து ரூ.62 லட்சம் மதிப்பு வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் பெருமளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னையில் இருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூருக்கு நேற்று காலை ஒரு விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் செல்வதற்காக வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது 27 பேரிடம் சோதனை செய்தனர். இதில் 5 பேர் தங்களிடம் வெளிநாட்டு பணம் இருப்பதாக தெரிவித்தனர். மற்ற 22 பேர் எதுவும் சொல்லவில்லை.
அவர்களது உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர்களது சூட்கேசில் துணிகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க, சிங்கப்பூர் டாலர்கள், யூரோ, தாய்லாந்து நாட்டு பணம், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் கணக்கில் வராத இந்த பணத்தை எதற்காக கொண்டு செல்கின்றனர். இது ஹவாலா பணமா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்துவந்த விமானத்தில் சாகுல் அமீது என்பவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் தங்கத்தை கைப்பற்றியதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு துறையினர் செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளனர்.
ஆலந்தூர்:
ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (36) டான்ஸ்மாஸ்டர். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நண்பருடன் மயிலாப்பூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
ஆலந்தூர் எம்.கே.என். சாலை பரங்கிமலை சுரங்க பாதை அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ பிடித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேளம்பாக்கத்தை அடுத்த படூர் ராஜன் நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகள் ரஞ்சனா சோழிங்கநல்லூரில் சிலம்பாட்ட பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்.
பெற்றோர் இருவரும் அவரை தினமும் பயிற்சிக்கு கொண்டுபோய் விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். நேற்று இரவு பயிற்சி முடித்த மகளை இருவரும் மோட்டார் சைக்கிளில் அழைத்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
படூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை மறித்து முகவரி கேட்டனர். திடீரென அவர்கள் மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதேபோல், திருத்தணி சின்னத்துரை சேர்ந்தவர் பரந்தாமன் (55) விவசாயி. இவர் தனது அக்கா தெய்வநாயகி, மற்றும் மகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
நேற்று இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர். இதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று இரவு 2 மணி அளவில் பரந்தாமனின் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து அதில் இருந்த 7½ பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டிற்குள் தூங்கிய பரந்தாமனின் பேத்தி யுவஸ்ரீயின் காலில் கிடந்த கொலுசை கழற்ற முயன்றனர்.
அப்போது தண்ணீர் குடிக்க தெய்வநாயகி வீட்டிற்குள் வந்தார். மர்ம நபர்கள் யுவஸ்ரீ கொலுசை கழற்றுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே திருடன் திருடன் என கத்தினார். அதற்குள் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்றனர்.
இதுகுறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சமாகும்.
செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் மறைமலைநகரை அடுத்த ஆப்பூர், சேந்தமங்கலம், குருவன்மேடு, வெங்கடாபுரம், சாஸ்திரப்பாக்கம், கொளத்தூர், வெண்பாக்கம், ரெட்டி பாளையம், கொளத்தாஞ்சேரி, கொங்கனாஞ்சேரி, பாலூர், கரும்பாக்கம், வில்லியம்பாக்கம். ஆத்தூர், வடகால், திம்மாவரம், அண்ணா நகர் உள்பட பல்வேறு கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்று அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், கொளத்தூர், வெண்பாக்கம், வெங்கடாபுரம், சாஸ்திரிப் பாக்கம், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர் ஆகிய பகுதிகளில் தேவையான குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வில்லியம்பாக்கம் அருகே உள்ள பாலாறு பகுதியில் இருந்து கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் வெற்றி பெற்றதும் கலைஞர், தளபதி கவனத்துக்கு கொண்டு சென்று இதை நிறைவேற்றுவேன் என்று வரலட்சுமி மதுசூதனன் தெரிவித்தார்.
உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். உடன் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, முன்னாள் எம்.எல்.ஏ, மூர்த்தி, ஆனந்தன், விவசாய அணி செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஊராட்சி பிரதிநிதி வில்சன் சாம்ராஜ், கழக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மாணிக்கம், கண்ணன், சிவராஜ், சரவணன், கோதை கண்ணன், சண்முகம், ரவிசங்கர், அரிபாலு, சூசைராஜ், ரமேஷ், சுமன், கலைவாணி, உதயன், வெங்கடாபுரம், ஊராட்சி செயலாளர் தருமன், பிரதிநிதிகள் தெய்வானை, ரவி, குணா, ரங்கநாதன், மேகநாதன் உடன் சென்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வப்பெருந்தகை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ஆட்சி மாற்றம் செய்ய ‘கை’ சின்னத்திற்கு வாக்களிப்பதாக உறுதியளித்து வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம், திருமங்கலம், கண்டிகை ஆகிய பகுதிகளில் இன்று கு.செல்வப்பெருந்தகை ஆதரவு திரட்டினார். அப்போது அவர் சுங்குவார் சத்திரத்திற்கு நீண்ட காலமாக பஸ் நிலையம் வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை நான் நிவர்த்தி செய்கிறேன். என்னை வெற்றி பெற செய்தால் நவீன பஸ் நிலையம் அமைத்து தருவேன் என்று வேட்பாளர் கு.செல்வப் பெருந்தகை உறுதியளித்தார். பிரசாரத்தின் போது செல்வப் பெருந்தகைக்கு திருமங்கலத்தில் ஊராட்சி துணை தலைவர் அன்பு மேள தாளத்துடன் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கோபால், நிர்வாகிகள் ஏழுமலை, சிவபாதம், குன்னம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன், முருகன், பொடலூர் ரவி, ஜம்போடை சங்கர், முரளிதரன், ரவிசந்திரன், சாமந்தி நாசர், ராமமூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகிகள், சந்தவேலூர் செல்வம், பிராசிஸ், அன்பு, அசோகன், நிக்கோலஸ், துளசி, ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் காட்டு கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (70). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் நோக்கி சென்றார்.
ஆழ்வாரன்பூண்டி அருகே சென்ற போது நிலை தடுமாறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி கோவிந்தராசு தலைமையில் 3 பறக்கும் படையினர், திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் தாசில்தார் விமல்குமார் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் உள்பட 5 பேர் கொண்ட பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 5 இரும்பு பெட்டிகள் இருந்தன.
இதுபற்றி மினிவேன் டிரைவரிடம் கேட்டபோது, “இது ஆக்ஸிஸ் வங்கியின் பணம். சென்னையில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு கொண்டு செல்வதாக” கூறினார்.
அதற்கான ஆவணங்களை காட்டும்படி தாசில்தார் விமல்குமார் கேட்டார். ஆனால் அவரிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணம் மற்றும் மினிவேனில் வந்த வங்கி அலுவலர், டிரைவர் ஆகியோரை திருப்போரூர் தேர்தல் அதிகாரி கோவிந்தராசுவிடம் ஒப்படைத்தனர். அவர், வங்கி அலுவலரிடம் விசாரித்த போது அந்த இரும்பு பெட்டியில் ரூ.31½ லட்சம் இருக்கிறது. இதற்கான ஆவணங்களை மறுநாள் காலை காண்பிக்கிறோம் என்றனர்.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் அதிகாரி கோவிந்தராசு உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் அந்த பணத்தை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு 5 இரும்பு பெட்டிகளில் இருந்த பணத்தை திருப்போரூர் தேர்தல் அதிகாரி கோவிந்தராசு முன்னிலையில் தாசில்தார் விமல்குமார், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் எண்ணி பார்த்தனர்.
ஆனால் இரும்பு பெட்டிகளில் கோடிக்கணக்கில் பணம் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி புதுச்சேரியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் நாராயணகவுசிங் என்பவரை அழைத்து விசாரித்த போது அவர், ரூ.4 கோடியே 3 லட்சம் பணம் இருப்பதாக கூறினார்.
இதையடுத்து அந்த பணத்துக்கு உரிய ஆவணங்களை திருப்போரூர் தேர்தல் அதிகாரி கோவிந்தராசுவிடம் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்த பணத்தை நள்ளிரவு 1 மணியளவில் வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தின் உள்ளே 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் ரேடார்வழியான முக்கிய பாதுகாப்பு மற்றும் அணுக்களை கொண்டு வரும் கனரக வாகனத்தின் தரைவழி போக்குவரத்து பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு அணுமின் நிலைய வளாகத்தில் அனைத்து வசதிகள் இருந்தும் தற்போது போதிய குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் எடையூர் கேட் அருகே தங்கியிருக்கும் ராணுவ வீரர்கள் லாரியில் மாமல்லபுரம் வந்து பொது மக்களுக்கான குடிநீரை கேன்களில் பிடித்து அணுமின் நிலையத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
இதனால் மாமல்லபுரம் பகுதிவாசிகள் குடிநீர் பிடிக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அணுமின் நிலைய ராணுவ வீரர்கள் குடிநீர் பிடிக்க வெளியே வருகிறது. இந்த ஆண்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.






