என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் மாஜிஸ்திரேட்டு 13 கேள்விகள் கேட்டு, 24-ந் தேதிக்குள் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
    ஆலந்தூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2012-ம் ஆண்டு நடந்த சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தரகர்கள் உள்பட 11-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கட் கோர்ட்டில் ஆஜரானார். போலீஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு இந்த வழக்கில் பங்கு என்ன? பங்கு குறித்து விசாரிக்கப்பட்டதா? விசாரிக்கப்படவில்லை என்றால் ஏன்? என்று பதில் அளிக்க வேண்டும்?

    ஐ.பி.எல். போட்டிக்கு தரகர்கள் சென்ற தகவல்கள் குறித்து இடம்பெறவில்லை? இந்த வழக்கில் குருநாத் மெய்யப்பனுக்கும் விக்ரமுக்கும் எப்படிப்பட்ட தொடர்பு என்பது விளக்கப்படவில்லை? இந்த வழக்கில் குருநாத் மெய்யப்பனையும் வின்டூதரசிங்கையும் ஏன் விசாரிக்கவில்லை? விசாரித்து இருந்தால் அதன் தகவல்களை தரவேண்டும். இல்லை என்றால் ஏன் விசாரிக்கவில்லை என்று விளக்கமளிக்க வேண்டும்.

    குருநாத் மெய்யப்பன் மற்றும் வின்டூதரசிங் ஆகியோரின் செல்பேசி உரையாடல் பரிசோதிக்கப்பட்டதா? பரிசோதிக்கப்படவில்லை என்றால் ஏன் என்று விளக்க வேண்டும். உத்தமன் ஜெயின் என்ற கிட்டி, விக்ரம் ஆகியோரிடம் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் முன்னும், விளையாடிய பின்னரும் குருநாத் மெய்யப்பன் மற்றும் விக்ரம் உரையாடிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது உள்பட 13 கேள்விகள் கேட்டார்.

    இந்த கேள்விகளுக்கு விளக்கமாக 24-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    காஞ்சீபுரம்:

    சென்னை திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (41). பிரபல சாராய வியாபாரி இவர் மீது ஈரோடு, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எரிசாராய கடத்தல் உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு ஆந்திராவில் சாராய பேக்டரியும் உள்ளதாக கூறப்படுகிறது.

    இவர் பாளையங்கோட்டை பகுதியில் குற்றச்செயலில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் இவர் மீது காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, மாவட்ட கலெக்டர் கஜெலட்சுமிக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து மகேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    மடிப்பாக்கத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலந்தூர்:

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

    வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவர்கள் இரவு-பகலாக அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதுவரை ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் ரூ. 90 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் அருகே வசித்து வரும் 169-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் ஜெயச்சந்திரன் வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தேர்தல் அதிகாரி செந்தில்வேல் தலைமையில் அதிகாரிகள் நேற்று இரவு ஜெயச்சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது.

    அப்போது கட்டு கட்டாக ரூ. 40 லட்சத்து 38 ஆயிரத்து 148 ரொக்கம் இருந்தது. பணத்திற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னையில் இருந்து துபாய்க்கு ரூ.2 கோடி வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்ல முயன்ற வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
    ஆலந்தூர் :

    சென்னையில் இருந்து துபாய்க்கு ரூ.2 கோடி வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்ல முயன்ற வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த மது (வயது 35) என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அவரது கைப்பையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகள் இருந்தன. அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவர் அணிந்திருந்த உடையிலும், சூட்கேசிலும் மறைத்து வைத்து இருந்த ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    அவரிடம் இருந்து மொத்தம் ரூ.2 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மதுவின் விமான பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்.

    அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அது ஹவாலா பணமா?, துபாய்க்கு கடத்திச் செல்லும்படி அந்த பணத்தை மதுவிடம் கொடுத்து அனுப்பியவர்கள் யார்? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பும் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    * கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஞானமூர்த்தி(50) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர்கள் திருடி சென்றனர்.

    * கொரட்டூர் பகுதியில் பழைய வீட்டு சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்ட விசாகப்பட்டினத்தை சேர்ந்த அப்பாராவ்(33) மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்.

    * ஆவடி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஆந்திராவை சேர்ந்த தனியன், ஈசாக் ஆகிய 2 சிறுவர்களை நேற்று ரெயில்வே போலீசார் மீட்டனர்.

    * வில்லிவாக்கம் லோகோ பாலம் அருகே நேற்று காலை மின்சார ரெயில் மோதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பலியானார். அவர் யார்? என போலீசார் விசாரிக்கிறார்கள். 
    தாம்பரத்தில் ஏரியில் மூழ்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவரின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள், மேலும் 2 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் காந்தி நகர் கலைமகள் தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 47), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமாரி. இவர்களது மகன்கள் உதயசூரியன் (16), பிரபாகரன் (13). இவர்களில் பிரபாகரன், சூளைமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மதியம் தன்ராஜும், அவருடைய மனைவி முத்துமாரியின் தம்பியான முத்துராசா (27) என்பவரும் மேற்கு தாம்பரம் முல்லை நகர் பகுதியில் உள்ள புதுதாங்கல் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் இருவரும் ஏரியில் ஆழம் குறைவான பகுதியில் நின்று கொண்டு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தன்ராஜின் 2-வது மகன் பிரபாகரன், தனது மாமா முத்துராசாவிடம் தனக்கு நீச்சல் கற்றுத்தரும்படி கேட்டார்.

    இதையடுத்து முத்துராசா, பிரபாகரனுக்கு ஏரியில் நீச்சல் கற்று கொடுத்துக்கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தன்ராஜ், அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் நீரில் மூழ்கி பலியானார்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏரியில் இறங்கி 3 பேரையும் தேடினர். அப்போது தன்ராஜின் உடலை மட்டும் மீட்டனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நீரில் மூழ்கிய பிரபாகரன் மற்றும் முத்துராசா ஆகியோரின் உடல்களை 5 மணி நேரமாக ஏரியில் ரப்பர் டியூப் கட்டி தீயணைப்பு வீரர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அதற்குள் இருட்டி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) தொடர்ந்து அவர்கள் 2 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் காஜா நகரை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது வீட்டை உடைத்து கொள்ளையர்கள் நகையை அள்ளிச் சென்றனர்

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் காஜா நகரை சேர்ந்தவர் சம்சுதீன். அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து 19 பவுன் நகை, ½ கிலோ வெள்ளிப் பொருட்களை அள்ளி சென்று விட்டனர்.

    சம்சுதீனும், அவரது குடும்பத்தினரும் மற்றொரு அறையில் தூங்கியதால் கொள்ளை நடந்தது தெரிய வில்லை. அதிகாலை எழுந்த போதுதான் பீரோவில் இருந்த நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பற்றிய விபரத்தை சேகரித்து வருகின்றனர்.

    வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×