என் மலர்
செய்திகள்

பைக்கில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
ஆழ்வாரன்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் காட்டு கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (70). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் நோக்கி சென்றார்.
ஆழ்வாரன்பூண்டி அருகே சென்ற போது நிலை தடுமாறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






