என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மலிவுவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் மட்டும் தகர்க்கப்படவில்லை. பல பேருடைய வீடு கட்டும் கனவும் தகர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு மோசமான நிர்வாகத்தின் குறியீடு.

    நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய இந்த கட்டிடத்துக்கு மோசமான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதுவே கடைசியாக இருக்கட்டும். இனிமேல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.

    தி.மு.க. 3 தொகுதி தேர்தலிலும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

    ஏற்கனவே தி.மு.க.விடம் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும், சட்டசபையில் முறையாக செயல்படாமல் வெளிநடப்புதான் செய்தார்கள். எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

    இந்த இடைத்தேர்தல் ஒரு மாற்று அரசியலாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற நிர்வாகத்தையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் கொண்டு வர முடியும்.

    சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கூடாது என்று தமிழகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

    காவிரி பிரச்சனை என்பது தமிழகம் - கர்நாடக இரு மாநில பிரச்சனை. அதில் பிரதமர் தலையிட வேண்டியதில்லை. ஏன் இதில் மத்திய அரசை குறை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

    உச்சநீதிமன்றம் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட பிறகும் அதை செயல்படுத்தாத காங்கிரஸ் அரசை ஏன் யாரும் குறை கூறுவதில்லை.

    மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறுவது தவறான கருத்து.

    இன்னும் பல நல்ல திட்டங்கள் மத்திய அரசால் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு ஒரு பாலமாக இருக்க வேண்டும்.

    நடைபெற உள்ள 3 தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஒருநல்ல நிர்வாகம் வேண்டும். சென்னையில் முதியோர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் பருவமழை ஆரம்பித்து விட்டது. ஆனால் மழைக்கான முன்னேற்பாடுகளை அரசு நிர்வாகம் இன்னும் முடுக்கிவிடாமல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தாம்பரத்தில் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து பெண் இன்று 3-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தினார்.
    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் அபிப் முகமது (33). அவரது மனைவி நஸ்ரீன் (24). சைதாப்பேட்டையை சேர்ந்த இவருக்கும் அபிப் முகமதுவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    நஸ்ரினுக்கு 2 முறை கரு கலைந்தது. அதை தொடர்ந்து நஸ்ரினுடன் வாழ அபிப் முகமது மறுத்து விட்டார். அதை தொடர்ந்து சமாதான பேச்சு நடத்தியும் நஸ்ரினை அவர் ஏற்கவில்லை.

    இது குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் கணவர் அபிப் முகமது வீட்டுக்கு நஸ்ரின் வந்தார். அவரை பார்த்ததும் கதவை பூட்டி விட்டு அபிப் முகமது வெளியே சென்று விட்டார்.

    ஆனால் நஸ்ரின் அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்ததும் மகளிர் போலீசார் விரைந்து வந்து அவருடன் சமரச பேச்சு நடத்தினார்கள். ஆனால் அவர் அங்கிருந்து வெளியேறவில்லை.

    கணவருடன் சேர்த்து வையுங்கள். கட்டாயப்படுத்தி அழைத்து சென்றால் தற்கொலை செய்வேன் என தெரிவித்தார். இந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கணவர் தன்னை சேர்த்துக்கொள்ளும் வரை போராட்டம் நடத்த போவதாக கூறினார்.
    பருவமழை பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெறும் 3 தொகுதி இடைத்தேர்தலிலும் மாற்றத்தை கொண்டு வர மக்கள் வழிவகை செய்ய வேண்டும்.

    மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படுவது உலக சாதனையாக பேசப்படுகிறது. ஆனால் அது நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அரசு அனுமதியுடன் கட்டப்பட்டது.

    தமிழகத்தில் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதியோர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு திட்டம் என்று கொண்டு வந்தார்கள். அது சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

    முதியோர்கள் பாதுகாப்புக்கு சிறப்பு தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது. அதனை ஒரே நாளில் முதியோர்கள் படித்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே அந்த தொலைபேசி எண்ணை டி.வி., வானொலி, பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.

    மத்திய அரசு நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக முன்னேற்ற முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் டாக்டர் ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    நாட்டை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    தொழில்துறை முதலீட்டில் தமிழகம் 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இது விவசாயிகளுக்கு ஏற்ற சூழல் அல்ல. தொழில் துறை முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும் ஏற்ற சூழ்நிலைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

    கடந்த ஆண்டு மழையினால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் மழை பாதிப்பை தடுக்க அரசும், மாநகராட்சியும் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. ஆண்டவன் நம்மை காப்பாற்றவில்லை. இனி ஆண்டவன்தான் நம்மை காப்பாற்ற வேண்டும். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு தி.மு.க.வும் காரணம்.

    தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. பா.ஜனதா மத்தியில் பொறுப்பேற்ற பிறகு 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழக மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மடிப்பாக்கத்தில் டெலிவி‌ஷன் தலையில் விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசன்பேட்டை பிள்ளை கோவில் தெருவில் வசித்து வருபவர் செந்தில்நாதன். இவரது 1½ வயது பெண் குழந்தை நித்திஷா.

    நேற்று இரவு செந்தில் நாதன் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது குழந்தை நித்திஷா ‘டி.வி. ஸ்டான்டை’ பிடித்து எழுந்தாள்.

    திடீரென டி.வி. குழந்தையின் தலை மீது விழுந்தது. இதில் நித்திஷாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நித்திஷா பரிதாபமாக இறந்தாள். இச்சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட 7 பேரும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவன்தாங்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் 2 கார் களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார்.

    கடந்த 30-ந்தேதி இரவு சிவன்தாங்கல் பள்ளி அருகே கார்த்திக் தனது நண்பர் ஜெயவேலுவுடன் பேசி கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்று தப்பி விட்டது.

    இதுகுறித்தி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த முரளி தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்தது தெரிய வந்தது.

    நேற்று இரவு சிவன்தாங்கல் கங்கையம்மன் கோவில் அருகே பதுங்கிருந்த முரளி, அவரது நண்பர்கள் ஜெகதீஸ்சன், புவனேஸ்குமார், ராஜ், தினேஷ், சரத்குமார், சின்ராஜ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். போலீசாரிடம் முரளி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் சொந்தமாக கார்கள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தேன். இதில் எனக்கும் கார்த்திக்கும் தொழில் போட்டி ஏற்பட்டது. 5 ஆண்டுக்கு முன்பு என்னிடம் இருந்த காண் டிராக்ட் கார்த்திக் மூலம் ரத்து ஆனது.

    இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தேன். அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்படும். கடந்த 18-ந்தேதி ஒரு சாவு ஊர் வலத்தில் பங்கேற்ற போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கார்த்திக் என்னை கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட 7 பேரும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று வைகோ கூறினார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

    மக்கள் நலக்கூட்டணி சார்பில் 4 கட்சிகளும் கலந்து பேசி தான் கடந்த மாதம் 22-ந்தேதி 3 தொகுதிகளுக்கான தேர்தலை புறக்கணிப்பது என அறிவித்தோம். இதனை கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்துகளை கேட்டு தான் அறிவித்தேன். தன்னிச்சையாக அறிவித்ததாக சில பத்திரிகைகளில் செய்தி வந்ததை கூட்டணியில் உள்ள கட்சிகள் மறுத்துள்ளன.

    போட்டியிடுவதில்லை என்பதற்கும், புறக்கணிக்கிறோம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. யாருக்கும் ஆதரவு தருவது இல்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு. எனவே தமிழகத்தில் எந்த ஒரு கட்சிக்கும் எங்கள் ஆதரவு கிடையாது.

    புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து இயங்குகிறது. தமிழகத்தில் உள்ள முடிவுகளை பின்பற்றுவதில்லை என அவர்கள் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. எனவே மக்கள் நலக்கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரசை ஆதரிக்காது என்று கூறி உள்ளது. அதே சமயம் புதுச்சேரி தேர்தலை ம.தி.மு.க., புறக்கணிக்கிறது.

    மக்கள் நல கூட்டணி நீண்ட நாள் நீடிக்காது என்று காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறிய கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வீடு வீடாக சென்று விசாரித்து வருகிறார்கள்.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கடந்த 29-ந்தேதி இரவு கஞ்சா விற்பதில் 2 கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் அதே பகுதியை சேர்ந்த களியா என்ற ரஞ்சித் குமார், சக்திவேல் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் தப்பி ஓடிய போது மாடியில் இருந்து விழுந்து ஜெபஸ்டின் மில்லர் பலியானார். பலத்த காயம் அடைந்த செங்கோட்டையனுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக கண்ணகி நகரை சேர்ந்த மணிமாறன், தமிழரசன், அற்புதராஜ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் மோதலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    கொலைகளுக்கு கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதலே முக்கிய காரணமாக உள்ளது. இதையடுத்து கஞ்சா வியாபாரிகள் பற்றிய விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    மேலும் கண்ணகி நகரில் உள்ள ரவுடிகள் பட்டியலையும் சேகரித்து உள்ளனர். இது பற்றி போலீசார் வீடு வீடாக சென்று விசாரித்து வருகிறார்கள்.

    கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் பலர் இன்னும் சிக்கவில்லை. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேற்கு தாம்பரத்தில் சேர்ந்து வாழ மறுக்கும் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து மனைவி 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.
    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் அபிப் முகமது. இவர் தாம்பரத்தில் அரிசி கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த நஸ்ரின் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    நஸ்ரினுக்கு இரண்டு முறை கரு கலைந்தது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் வீட்டுக்கு வந்த நஸ்ரினுடன் சேர்ந்து வாழ திடீரென அபிப் முகமது மறுத்தார். இருமுறை  கரு கலைந்ததால் நஸ்ரினுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறினார்.

    இதையடுத்து அபிப் முகமதுவிடம் பெரியவர்கள் சமாதான பேச்சு நடத்தினர். ஆனால் அதை அபிப்முகமது ஏற்கவில்லை.

    இதுகுறித்து நஸ்ரின் தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை கணவர் வீட்டுக்கு நஸ்ரின் வந்தார். உடனே அபிப்முகமது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்.

    இதனால் நஸ்ரின் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இன்று 2-வது நாளாக பூட்டப்பட்ட கணவர் வீட்டு முன்பு நஸ்ரின் அமர்ந்த படியே உள்ளார்.
    சென்னை நகரின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வந்த தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று மாலை முதல் சென்னைக்கு தென் மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இன்று வேலை நாள் என்பதால் நேற்று ஒரே நாளில் ஏராளமானவர்கள் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.

    இதனால் இன்று அதிகாலை முதலே சென்னை நகரின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூருக்கு வழக்கமாக 15 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் இன்று காலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வாகனங்கள் நகராமல் அப்படியே நின்றன. இதனால் பணிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர்.

    வெளியூரில் இருந்து வந்த வாகனங்கள் பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக கோயம்பேட்டிற்கு சென்றன. தாம்பரம், கிண்டி, பல்லாவரம் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் பெருங்களத்தூரில் இறங்கி மாற்று வாகனங்களில் சென்றனர். இதனால் பெருங்களத்தூர் பஸ்நிலையம் அதிகாலையிலேயே பரபரப்பாக காணப்பட்டது. ஷேர் ஆட்டோ, வாகனங்களால் அங்கும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    போக்குவரத்து நெரிசலால் அவதி அடைந்த பயணிகள் பலர் பெருங்களத்தூரில் இருந்து மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதியம் 12 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்கள் மோதலில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி இன்று மதியம் அரசு பஸ் சென்றது. தண்டலம் அருகே சென்ற போது செய்யாறில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் முந்தி செல்ல முயன்றது.

    அப்போது முன்னாள் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது இடித்து 2 பஸ்களும் மோதின. இதில் பஸ்களுக்கு மத்தியில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் உடல் நசுங்கி பலியானர். மேலும் பஸ்களில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    பலியான வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உத்திரமேரூர் அருகே தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

    உத்திரமேரூரை அடுத்த நெல்லூர், திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50) முடித்திருத்தும் தொழிலாளி. இவரது மகன் பிரகாஷ். திண்டிவனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தீபாவளியையொட்டி பிரகாஷ் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது.

    அப்போது கதிர்வேல் மது போதையில் வந்து ரகளை செய்தார். இதனை பிரகாஷ் கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம அடைந்த கதிர்வேல் முடித்திருத்தும் கத்தியை காட்டி மிரட்டினார்.

    உடனே பிரகாஷ் அந்த கத்தியை பறித்து தந்தை கதர்வேலை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிரகாசை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 17). கல்லூரி மாணவர். இவர் கடந்த 27-ந்தேதி நண்பர்களுடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.

    கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது டில்லிபாபு தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர் பலியானார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×