search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்- வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தல்
    X

    வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

    பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்- வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தல்

    • நகரில் உள்ள சாலை மற்றும் தெருக்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
    • ஆன்லைன் வர்த்தகத்தை தடை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் முகம்மது யூசுப் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணன், முகம்மது ஹனீபா, கான்முகம்மது, கவுரவ ஆலோசகர் சம்சுதீன், துணைசெயலாளர்கள் செய்யதுஅலி, ஆதிமூலம், ரவிக்குமார், பொருளாளர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை குறிப்பாக நயினார்குளம் சாலை மற்றும் தெருக்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    புதுப்பேட்டை செக்கடி சுடலைமாடன்சுவாமி கோவில் அருகில் தண்ணீர் குழாய் உடைந்து நீர் வெளியே சென்றது. இதுதொடர்பாக வியாபாரிகள் சங்கம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயர் சரவணன் , துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, பொதுமக்கள் வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.

    சேரன்மகாதேவி முதல் புதுப்பேட்டை நோக்கி செல்லும் தண்ணீர் செல்லும் ஓடைகள் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தால் அனைத்து வியாபாரிகளும் சிறுவணிகர்களும் நலிவடைந்து வருவதால் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×