என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சரவணம்பட்டியில் மூதாட்டியிடம் நகைப்பறிப்பு
  X

  சரவணம்பட்டியில் மூதாட்டியிடம் நகைப்பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
  • வாலிபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 2½ தங்க நகையை பறித்தனர்.

  கோவை,

  கோவை சரவணம்பட்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி லட்சுமி (வயது 72).

  இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் லட்சுமியிடம் முகவரி கேட்பது போல் நடித்தனர்.

  லட்சுமி அசந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 2½ தங்க நகையை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.

  அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கண் இமைக்கும் நேரத்தில் பறந்து சென்றனர். இதுகுறித்து லட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து நகைப்பறிப்பில் ஈடுப்பட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×