என் மலர்
உள்ளூர் செய்திகள்

செயற்கை நுண்ணறிவு எந்திரம் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட காட்சி
விளாத்திகுளம் அருகே விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு எந்திரம் அறிமுகம்
- தமிழகத்தில் முதல்முறையாக ரூ. 11 லட்சம் மதிப்பிலான 12 பசல் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- விழாவில் சுமிந்தர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரபேல் தலைமை தாங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தில் சுமிந்தர் இந்தியா நிறுவனம் மற்றும் மதுரை கலசம் நிறுவனம் சார்பில் இயற்கை முறையில் மிளகாய் தோட்டப்பயிர் விவசாயம் செய்யும் விவசாய நிலத்தில் விவசாய நிலத்தின் தன்மை, பயிர்களின் வளர்ச்சி, நீர் தேவை, அன்றைய வானிலை, பயிர்களுக்கு தேவையான உரம் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி வடிவில் முன்கூட்டியே துல்லியமான தகவல்களை வழங்கும் ரூ. 11 லட்சம் மதிப்பிலான 12 பசல் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் தமிழகத்தில் முதல்முறையாக மிளகாய் தோட்டம் உற்பத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குருவார்பட்டி கிராமத்தில் வைத்து நடந்த பசல் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் அறிமுக விழாவில் சுமிந்தர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரபேல் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் வேளாண் விரிவாக்கம் மைய அதிகாரிகள் அருள்பரத், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஜஸ்வின், டேவிட், ராஜசேகர், லட்சுமணன், ஹரிசுக்லா, லூகஸ் நிறுவன அதிகாரிகள் லட்சுமி, வருண், கலசம் நிறுவன அதிகாரிகள் தவமணி, சுரேஷ், சுதாகர், விவசாய பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






