search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறையில் பசுந்தேயிலை பறிக்கும் பணி தீவிரம்
    X

    வால்பாறையில் பசுந்தேயிலை பறிக்கும் பணி தீவிரம்

    • வால்பாறையில் 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.
    • நவீன எந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் 32,825 ஹெக்டேரில் தேயிலை, காபி மற்றும் மிளகு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக, தேயிலை செடிகள் துளிர் விட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.

    விரைவில் தென்மேற்கு பருவமழையும தொடங்கவுள்ளதால், அதற்கு முன்னதாக பசுந்தேயிலை பறிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பசுந்தேயிலை பறிக்க முடியாத நிலையில், நவீன எந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான எஸ்டேட்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால், காலை, மாலை நேரங்களில் தொழிலாளர்களுக்கு இன்சென்டிவ் அடிப்படையில் கூடுதல் நேரம் பணி வழங்கப்படுிறது.

    இதுகுறித்து தேயிலைத் தோட்ட அதிகாரிகள் கூறும் போது, 30 தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் எந்திரம் வாயிலாக தேயிலை பறிப்பதால் 6 தொழிலாளர்கள் கொண்டு பணி நடைபெறுகிறது.

    சம மட்ட எஸ்டேட்களில் மட்டுமே இது போன்ற எந்திரங்களைக் கொண்டு தேயிலை பறிக்க முடியும். மலைச்சரிவு கொண்ட இடங்களில் தொழிலாளர்கள் கத்தரி வெட்டு வாயிலாக தேயிலை பறிக்கின்றனர் என்றனர்.

    Next Story
    ×