search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு- பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடியாக  தீர்வு கண்ட அமைச்சர் கீதாஜீவனுக்கு பாராட்டு
    X

    9-வது வார்டுக்குட்பட்ட மீன்மார்க்கெட் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு- பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு கண்ட அமைச்சர் கீதாஜீவனுக்கு பாராட்டு

    • சாலையை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • அமைச்சர் கீதாஜீவன் உத்தரவுப்படி முழுமையாக அந்த சாலை சீரமைக்கப் பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களை பெற்று வருகிறார்.

    மீன் மார்க்கெட்

    இந்நிலையில் 9-வது வார்டுக்குட்பட்ட பூபால் ராயர்புரம் மெயின் 5-வது தெரு சந்திப்பு பகுதியில் கடந்த 4-ந்தேதி குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் பூபால் ராயர்புரம் மீன்மார்க்கெட் பகுதிகளில் சில குறைபாடுகள் இருப்பதை சரி செய்ய மாநகராட்சி ஹார்விபுரம் பகுதியில் ஜான்சன் பள்ளிக்கு பின்புறம் உள்ள சாலை ஒப்பந்ததாரரின் மெத்தன போக்கால் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தேவையற்ற பொருட்கள் குவியலாக இருந்தது.

    அவற்றை அப்புறப் படுத்தி அந்த சாலையை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அமைச்சருக்கு நன்றி

    இதனையடுத்து 5-ந்தேதி அமைச்சர் கீதாஜீவன் உத்தரவுப்படி முழுமையாக அந்த சாலை சீரமைக்கப் பட்டது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அமைச்சருக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    Next Story
    ×