search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசியில் 150-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவமனைகளில்  தடுப்பூசி - மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தகவல்
    X

    ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    நெல்லை, தென்காசியில் 150-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி - மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தகவல்

    • உலக வெறிநாய் கடி தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ரேபிட்ஸ் நோய் மிக கொடியதாகும். இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது

    நெல்லை:

    உலக வெறிநாய் கடி தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது .

    இதில் நெல்லை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்வேல் மற்றும் அரிமா சங்க ஆளுநர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது .

    தொடர்ந்து மண்டல இணை இயக்குனர் பொன்வேல் கூறியதாவது:-

    ரேபிட்ஸ் நோய் மிக கொடியதாகும். இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது . இந்த நோய் தாக்கிய நாய்கள் கால்களை இழுத்து நடக்கும். வாயில் இருந்து கோழை வடியும். இந்த அறிகுறிகள் கண்டால் உடனடியாக நாயை தனி அறையில் கட்டி வைத்து பாதுகாக்க வேண்டும்.

    நோய் தாக்கப்பட நாய்கள் மனிதர்களை கடித்து விட்டால், இதே அறிகுறிகள் மனிதர்களுக்கும் ஏற்படும். எனவே எந்த நாய்கள் கடித்தாலும் சாதாரணமாக விட்டுவிடாமல் உடனடியாக நாய் கடித்த இடத்தை சோப்பு, டெட்டால் கொண்டு சுத்தம் செய்துவிட்டு மருத்துவ மனைக்கு சென்று முறையான சிகிச்சை பெறவேண்டும்.

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் இன்று 150-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவ மனைகளில் 2057 தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணையிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது.

    2030-ம் ஆண்டுக்குள் ரேவிட்ஸ் நோய் இல்லாத நிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ரோஜர், மருத்துவர் முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×