என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விண்வெளி ஆராய்ச்சித் துறையில் வளர்ச்சி அடைந்த நாடு இந்தியா
  X

  விண்வெளி ஆராய்ச்சித் துறையில் வளர்ச்சி அடைந்த நாடு இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பெருமிதம்.
  • புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும்.

  பொள்ளாச்சி

  இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் கூறிய தாவது:-

  மாணவர்கள் வாழ்க்கை யில் உயர்ந்த நிலையை அடைய பயத்தை போக்கி எந்த ஒரு செயலிலும், அதிக கவனம், தீவிர முயற்சி எடுக்க வேண்டும். அந்த செயலை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும். மாணவர்கள் அறிவை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். குறைந்த மதிப்பெண் பெற்று இருந்தாலும் உங்களுக்கான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

  விண்வெளி ஆராய்ச்சி துறையில் நல்ல வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கிறது. மற்ற நாடுகளிடமும் விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இந்தியாவுக்கு நன்மதிப்பு உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு தயாரிப்பையும் நம் நாட்டிலேயே உரு வாக்கினால் அதிக பயன் உள்ளது. உதாரணமாக செயற்கை கோள் வாயிலாக படங்கள் பிடிக்க, இத்தாலி நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய முற்பட்டபோது நிபந்தனை விதிக்கப்பட்டது. அதில் மூன்று செயற்கைக் கோள்கள் வாயிலாக ஒரு ஆண்டுக்கு படம் பிடிக்க, 15 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் மூன்று ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி ரூபாய் கோரப்பட்டது.

  அப்பேது மத்திய அரசின் அனுமதி பெற்று 200 கோடியில் ஒரு செயற்கை கோள் வீதம் 600 கோடியில் மூன்று செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டு படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது இஸ்ரோவின் சாதனை. படித்து முடித்து வேலை தேடுவதை விட சுயமாக தொழில் நிறுவனங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்

  ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. மற்ற நாடுகளை விட இத்துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சிவன், ஆனைமலை மாசா ணியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக சிவன் அளித்த பேட்டியில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இன்னும் நிறைய தொழில்நுட்ப பணிகள் பாக்கி உள்ளது. அந்த பணிகள் முடிந்த பிறகு பல்வேறு கட்ட பரிசோதனைகளை செய்ய வேண்டி உள்ளது. முடிவில் தொழில்நுட்பம் சரியாக செயல்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதன்பின்னரே திட்டம் முழுமை பெறும் என்றார்.

  Next Story
  ×