search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் சுதந்திரதின விழா தேசியக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் பூங்கொடி வழங்கினார்
    X

    கலெக்டர் பூங்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    திண்டுக்கல்லில் சுதந்திரதின விழா தேசியக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் பூங்கொடி வழங்கினார்

    • சுதந்திரதின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கலெக்டர் பூங்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • இவ்விழாவில் 223 பயனாளிகளுக்கு ரூ.1.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

    திண்டுக்கல்:

    சுதந்திரதின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கலெக்டர் பூங்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வை யிட்டு அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி, சமாதானத்தின் அடை யாளமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். திண்டுக்கல் டி.ஐ.ஜி. அபினவ்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் 73 பேருக்கு பாராட்டுச் சான்றி தழ்கள் மற்றும் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.

    தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி த்துறை அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 165 அலுவலர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.

    இவ்விழாவில் 223 பயனாளிகளுக்கு ரூ.1.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கலெக்டர் பூங்கொடி மாலை அணிவித்து மலர் தூவி மாரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணை த்தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×