என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
  X

  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

  மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • மாற்றுத்திறனாளிகள் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அலுவலகங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைதளத்தில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வழியில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

  மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள அலுவலகத்திற்கு, உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அலுவலகங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

  மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதிகள், போக்குவரத்து வசதிகள், மனு கொடுப்பதற்கு தேவையான நகலெடுக்கும் கடைகள் உள்ளிட்டவை அப்பகுதியில் இல்லாததால் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் புதிதாக மாற்றப்பட்ட இடத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முன்பிருந்த இடத்திற்கே மாற்ற கோரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்களுக்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காத்திருப்புப் போராட்டம் மனுக் கொடுக்கும் போராட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  இதையடுத்து பரமத்திவேலூர் வட்டார மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் முன்பு சுமார் 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது பேசிய பரமத்திவேலூர் தாலுகா மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் சதீஷ்குமார் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ மீட்டருக்கு அப்பால் புதிதாக மாற்றப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற வேண்டும. அதுவரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

  Next Story
  ×