search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் கோவிட் சிறப்பு வார்டு கட்டிடம் திறப்பு
    X

    புதிய கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

    நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் கோவிட் சிறப்பு வார்டு கட்டிடம் திறப்பு

    • திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம்.
    • மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்கக்கூடியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவ மனையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் 'கோவிட் சிறப்பு வார்டு' கட்டிடம் கட்டப்ப ட்டது.

    இந்த கட்டிடத்தை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசும்போது, திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம். ஏழை எளியவர்கள் அதிகமா கவும், குடிசைகள் வீடுகள் நிறைந்த மாவட்ட மாகும். எனவே இந்த தொகுதியின் வளர்ச்சிதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இந்த மருத்து வமனையை பொருத்தவரை ஏழை எளிய மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்க கூடியது. எது தேவை என்று கேட்கும் பட்சத்தில் நிதி ஒதுக்கி தருவேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கோபால், இணை இயக்குநர் மருத்துவர் சிவக்குமார், தலைமை மருத்துவர் ரேணுகா, மருத்துவர்கள் வினோத் குமார், சக்ரவர்த்தி மற்றும் நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் சி.பி.ஜி. அன்பு, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சம்பத், நன்னிலம் நகர அ.தி.மு.க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×