என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.
தஞ்சையில், மாபெரும் தமிழ்க் கனவு- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
- தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
- உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது :-
தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி பல்வேறு கல்லூரி சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தமிழ்நாடு நவீனமடைந்த கதை என்ற தலைப்பிலும், கவிஞர் நந்தலாலா அகப்பொறியின் திறவுகோல்- கேள்விகளின் சிறப்பு என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினா ர்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.
நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்- நாகரிகமும் தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளரச்சியும், கணினி தமிழ் வளர்ச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்க ப்பட்டுள்ளது.இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன் பெறுவதோடு மட்டும ல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் மனுஷ்யபுத்திரன், நந்தலாலா, முனைவர் செந்தமிழ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.