என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரதநாட்டிய கலைஞர்களுக்கு மேயர் சண்.ராமநாதன் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.
தஞ்சையில், 150 கலைஞர்கள் நடனமாடிய பரதநாட்டிய விழா நிறைவு

- பரதநாட்டிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- முடிவில் நடன குழுவின் குரு தனலட்சுமி நன்றி கூறினார்.
தஞ்சாவூா்:
தஞ்சைப்பெரிய கோவில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் ஆந்திர மாநில பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.
முடிவில் பரதநாட்டிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பெரிய கோயில் சதய விழாக்குழுத்தலைவர் .து செல்வம் தலைமை தாங்கினார்.
துரை.கோவிந்தராஜ் (அறநிலையத்துறை பணி ஓய்வு) வரவேற்றார்.
தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு தென் மாநிலங்கள் பொதுச் செயலாளர் சந்திரபோஸ், மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஏ.பி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரதநாட்டிய கலைஞர்களுக்கு மேயர் சண். ராமநாதன் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
விழா ஏற்பாடுகளை டெல்லி தமிழிலக்கிய பேரவை நண்டர் குமார் ஒத்து ழைப்போடு செய்யப்பட்டிருந்தது.
முடிவில் நடன குழுவின் குரு தனலட்சுமி நன்றி கூறினார்.