search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
    X

    உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    தஞ்சையில், ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

    • ஊக்க ஊதியத்திற்கு பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயல் தலைவர் காத்த பெருமாள் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அவைச்செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் சதீஷ் வரவேற்புரை ஆற்றினார்.

    மாவட்டத் தலைவர்கள் ஆசைத்தம்பி, செந்தில்குமார் மற்றும் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் 10.06.2009 முதல் பணியேற்ற முதுகலையா சிரியர்கள் ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும்.

    2004-2006- ம் ஆண்டில் பணியேற்ற முதுகலையாசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை செய்திட வேண்டும்.

    ஊக்க ஊதியத்திற்குப் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

    தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை மாற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறை ப்படுத்திட வேண்டும்.

    ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்குப் போடப்படும் முறையற்ற தணிக்கைத் தடையை நீக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலர் பேசினர்.

    மேலும் அடுத்த கட்டமாக டிசம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×