search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தஞ்சையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • அனைவரும் பேரணியாக புறப்பட்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என விழிப்புணர்வு பதாகை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடைபெற்ற இந்தப் பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் அவர்களும் பேரணியாக புறப்பட்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் கல்லூரி மாணவ- மாணவிகள், தன்னா ர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.

    பிளா ஸ்டிக்கை தவிர்ப்போம், மஞ்சப்பையை பயன்படு த்துவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். பேரணியானது அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் ஊரா ட்சிகள் உதவி ஆணையர் சங்கர், தஞ்சை தாசில்தார் சக்திவேல், கவுன்சிலர் மேத்தா, முன்னாள் கவுன்சி லர் வீரையன் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×