search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    சங்கராபுரத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சங்கராபுரத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • சங்கராபுரத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, பள்ளி தாளாளர் ஜோசப்சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் வரவேற்றார். இதில் தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நில நடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×