என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
முத்துப்பேட்டையில், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவர்கள் மீட்பு
- முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தனர்.
- மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி, நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் தலைமையில் காப்பக மீட்பு குழுவினர் விஜயா, சுபா, சரவணன், சங்கர், மைக்கேல் ஆகியோர் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணை தலைவர் சிவக்குமார், முத்துப்பேட்டை வர்த்தக சங்க கழக தலைவர் கண்ணன், முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், பத்திரிக்கையாளர் முகைதீன் பிச்சை, வக்கீல் தீன் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியோர் இணைந்து முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.