search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வட்டார உரக்கடைகளில்   பறக்கும் படை வேளாண் அதிகாரிகள் திடீர் ஆய்வு
    X

    உர விற்பனை கடைகளில் சிறப்பு பறக்கும் படை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    பரமத்தி வட்டார உரக்கடைகளில் பறக்கும் படை வேளாண் அதிகாரிகள் திடீர் ஆய்வு

    • வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் உத்தரவின்படி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • அனைத்து கூட்டுறவு, தனியார் உரக்கடைகள், மொத்த விற்பனை சில்லரை விற்பனை ஆகிய கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் உத்தரவின்படி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உர விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும் மற்றும் அதிக விலைக்கு உர விற்பனை செய்தல், உரக்கடத்தல், உரப் பதுக்கல், வேளாண்மை இல்லாத பிற பயன்பாடுகளுக்கு (தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக) உபயோகித்தல் ஆகிய சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இதற்காக பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் திருச்செங்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லோகநாதன், பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை உதவி இயக்குநர், தமிழ்செல்வன் ஆகியோர் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பறக்கும்படை அதிகாரிகள் பரமத்தி வட்டாரத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு, தனியார் உரக்கடைகள், மொத்த விற்பனை சில்லரை விற்பனை ஆகிய கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது விதிமீறல்க ளில் ஈடுப்பட்ட உரக்கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் அவர்களுக்கு வேளாண் பயன்பாட்டிற்கான உரத்தினை வழங்கிய உரக்கடைகள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

    Next Story
    ×