என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்த மாட்டை காப்பாற்ற அழைத்தவர் மீது தாக்குதல்
- ராஜா பாதாள சாக்கடையில் விழுந்த மாட்டை காப்பாற்றுவதற்கு அங்கு இருந்த நபரிடம் உதவி கேட்டார்.
- ராஜாவை 2 நபர்கள் சேர்ந்து திடீரென்று சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் வண்ணாரபாளையம் கூட்டு ரோட்டில் பாதாள சாக்கடையில் மாடு தவறி விழுந்துவிட்டது. அப்போது அங்கு இருந்த 2 பேர் இதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். இதில் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ராஜா, பாதாள சாக்கடையில் விழுந்த மாட்டை காப்பாற்றுவதற்கு அங்கு இருந்த நபரிடம் உதவி கேட்டார். அப்போது அந்த நபர் சரியான முறையில் பதில் கூறவில்லை.
இதனை தொடர்ந்து ராஜாவுக்கும் அந்த நபருக்கும் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜாவை 2 நபர்கள் சேர்ந்து திடீரென்று சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






