என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள் தான் சேதம் அடைந்துள்ளன-அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
    X

    கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள் தான் சேதம் அடைந்துள்ளன-அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

    • 13 இடங்களில் ரூ.32 கோடியே 78 லட்சம் மதிப்பிலான திட்டபணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • 2 ஆண்டுகளில் ரூ.223 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாநராட்சி பகுதிகளில் உள்ள 13 இடங்களில் ரூ.32 கோடியே 78 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது கெம்பட்டி காலனி பிரதான சாலை பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.84 கோடி ரூபாய் மதிப்பிலான தார் சாலைகள் புதுப்பித்தல் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி பகுதிகளில் 13 இடங்களில் ரூ.32 கோடியே 78 லட்சம் மதிப்பிலான திட்டபணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சாலை அமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான நிதிகளை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் முடிந்த பிறகு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 13 இடங்களில் 6 இடங்கள் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    முதல்-அமைச்சரின் ஆணைக்கு இணங்க 100 வார்டுகளுக்கும் நாங்கள் நேரடியாக சென்று மனுக்களை பெற்ற போது ரூ.163 கோடி மதிப்பிலான சாலை அமைக்க கூடிய பணிகளுக்கு பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர் மனுக்களை கொடுத்தார்கள். மற்ற பணிகளுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான திட்ட மதிப்பீடுகளும் ெகாடுக்கப்பட்ட மனுக்களுக்கு தயார் செய்யப்பட்டது. ஒட்டு ெமாத்தமாக ரூ.193 கோடி மதிப்பிலான பணி களுக்கு கோரிக்கைகளை பொது மக்களும், குடியிருப்போர் சங்கத்தி னரும் முன் வைத்தார்கள். அதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.200 கோடி கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ஒதுக்குவதற்கு முதல்-அமைச்சர் ஒப்புதல் வழங்கினார். படிப்படியாக அந்த பணிகள் டெண்டர் முடிந்து தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுவரை ஒட்டு மொத்தமாக கோவை மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் மட்டும் இந்த 2 ஆண்டுகளில் ரூ.223 கோடியில் சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு 70 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது புதிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 121 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சி வரலாற்றில் இந்த குறுகிய காலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டது இல்லை. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு.

    இடையர்பாளையம் - தடாகம் சாலைப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். மெட்ரோ ரெயிலுக்கான டி.பி.ஆர். இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும். இதற்காக ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்புதல் கிடைத்த பிறகு பணிகள் தொடங்கப்படும்.

    கோவையின் வளர்ச் சிக்கு முதல்-அமைச்சர் தொடர்ந்து திட்டங்களை வழங்கி வருகிறார். கோவையில் படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காக டி.என். டெக் சிட்டி என்ற திட்டத்தை தொடங்கி உள்ளார். செம்மொழி பூங்கா அறிவிப்பு ஒரு சிறப்பான திட்டம். அதற்கான நிதிகளையும் வழங்கி உள்ளார். எழில் மிகு கோவை யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்-அமைச்சர் கோவையின் வளர்ச்சிக்கு திட்டங்களை வழங்கி உள்ளார். 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    கோவையில் சாலைகள் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள் தான் சேதம் அடைந்து இருந்தன. பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகள் மட்டும் தான் போடப்படவில்லை. இந்த சாலைகள் போடு வதற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வெள்ளலூர் பஸ் நிலைய திட்டம் குறித்து 30 நிமிட பதிலை 3 நிமிடத்தில் எதிர்பார்க்கிறீர்கள். வெள்ளலூர் பஸ் நிலையம் உள்பட நிறைய பணிகள் செய்ய வேண்டியது உள்ளது. பணிகள் தொடந்து நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை கமிஷனர் சர்மிளா, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×