என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்ட ஐ.டி. ஊழியர் சாவு
    X

    கோவையில் எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்ட ஐ.டி. ஊழியர் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்தார்.
    • மறுநாள் காலையில் அவருக்கு தொடர் வாந்தி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கினார்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே. புதூரை சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மகன் விகாஷ் (வயது 32). ஐ.டி. ஊழியர். கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு விகாஷ் வீட்டில் இருந்த படி வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது தூக்கம் வரமல் இருக்க பிஸ்கட் சாப்பிட்ட படி வேலை செய்தார். தெரியாமல் எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்டார். மறுநாள் காலையில் அவருக்கு தொடர் வாந்தி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக விகாஷை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிசிக்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விகாஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×