search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசத்தில், ரூ.288 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடக்கம்
    X

    பாபநாசத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    பாபநாசத்தில், ரூ.288 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடக்கம்

    • தமிழகத்தில் 544 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மா பேட்டை ஒன்றியங்களை சார்ந்த 252 குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா பாபநாசத்தில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை உரையாற்றினார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச் . ஜவாஹிருல்லா, தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையாளர் கருணாகரன் வரவேற்றார். தலைமை பொறியாளர் முரளி திட்ட விளக்க உரையாற்றினார்.

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என்.நேரு கலந்துகொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்புடன் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களில் 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார்.

    அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது :-

    தனது துறைக்கு இந்த வருடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் 5 கோடியே 50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் பெரு நகரங்களாக விளங்கும் கோவை ,மதுரை, சேலம் ஆகிய ஊர்களில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்றும்,

    , இந்த வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது துறைக்கு மட்டும் தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 544 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்துவதில் தமிழகம் 23 வது இடத்தில் இருந்ததாகவும் ,கே என் நேரு இத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றதும் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது என்றும் அதற்காக விருதும் கிடைத்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட தி.மு.க துணை செயலாளர்கள் கோவி.அய்யராசு, துரைமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் தாம ரைச்செல்வன், பாத்திமா ஜான் ராயல் அலி, ராதிகா கோபிநாத், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அம்மா பேட்டை ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றிய குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்கு மார்,பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், மற்றும் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் எழிலரசன் நன்றி கூறினார்.

    பாபநாசத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தினை அமைச்சர் கே. என். நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு தலைமை கொறடா கோவி செழியன் , எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×