என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாமில் வட்டார கல்வி அலுவலர் அருள்மணி பேசிய போது எடுத்த படம்.
ராசிபுரம் வட்டார வள மையத்தின் சார்பில் இல்லம் தேடி கல்வி பயிற்சி முகாம்
- இல்லம் தேடி கல்வித் திட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
- இதில் 135 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை இல்லம் தேடி கல்வித் திட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பயிற்சியை ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் அருள்மணி தொடங்கி வைத்தார். பயிற்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
பயிற்சியில் இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கி ணைப்பாளர் கலைச்செல்வி, ஆசிரிய பயிற்றுநர்கள் மல்லிகேஸ்வரி, கவிதா, லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு எண்ணும் எழுத்தும், குறைதீர் கற்பித்தல் என்ற தலைப்பில் வகுப்பறைகளின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் 135 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






