என் மலர்
உள்ளூர் செய்திகள்

அவினாசி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்
- பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
- வாழை மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
அவினாசி:
திருப்பூா் மாவட்டம் அவினாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பியநல்லூா் ஊராட்சி கந்தம்பா ளையத்தில் கணேஷ், ராஜாமணி, சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.
இதேபோல் சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால் முறியாண்டம்பாளையம், மங்கரசுவலையபாளையம், சாலையப்பாளையம், கானூா், புலிப்பாா் உள்ளி ட்ட பகுதிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி ஆகிய வகைகளை சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
கடந்த 2 நாட்களில் அவிநாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரி வித்துள்ளனா்.இதையடுத்து சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.






