என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேனி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
- இடிமின்னலுடன் பெய்த மழையினால் 70 மற்றும் 45 ஆண்டுகால பழமையான மரங்கள் முறிந்துசாலையில் விழுந்தது.
- பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை யினர் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்:
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வ ப்போது மழை பெய்து குளிர்வித்து வருகிறது. நேற்று இடிமின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
போடியில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். சுப்புராஜ் நகர் புதுக்காலனியில் 70 ஆண்டுகால பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. இதேபோல் போடி வ.உ.சி நகரில் ரேசன் கடை அருகே இருந்த 45 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்துசாலையில் விழுந்தது.
அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக சேதம் ஏற்படவில்லை. அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக மின்வாரியத்துறையினர் மின்இணைப்பை துண்டித்த னர். மேலும் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்து ப்பாறை, கல்லாறு, கும்ப க்கரை, செழும்பாறு உள்ளிட்ட அனைத்து ஆறு களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்ம ங்கலம், குள்ளப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வராக நதியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
எனவே பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை யினர் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 54.43 அடியாக உள்ளது. 50 கனஅடிநீர் வருகிற நிலையில் 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 57.73 அடியாக உள்ளது. 18 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 2.6, தேக்கடி 28.2, கூடலூர் 4.2, சோத்துப்பாறை 11 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.






