என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்: 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்
    X

    இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்: 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

    • சைலேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    • தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் செந்திலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் (வயது 42).

    கடந்த 2003-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த சைலேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    அப்போது தன்னுடன் பணியாற்றும் சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி கிராமத்தை சேர்ந்த செந்தில் (44) என்ற போலீஸ்காரருடன் சேர்ந்து இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, போக்சோ, தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

    இதனிடையே செந்தில் ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், புகாருக்குள்ளான 2 போலீஸ் காரர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். தகவல் அறிந்து 2 பேரும் தலைமறைவான நிலையில் நாகர்கோவிலில் பதுங்கியிருந்த சைலேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தொடர் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மோகன் (50 ) என்பவரும் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் செந்திலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனிடையே போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், போலீஸ்காரர்கள் 2 பேரையும் 'சஸ்பெண்டு' செய்து உத்தரவிட்டுள்ளார். அதனை ஜெயிலில் இருக்கும் சைலேசிடம் இன்று போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் செந்தில் வீட்டின் முன்பு அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டதற்கான தகவலை அந்த கிராம நிர்வாக அதிகாரி மூலமாக சுவற்றில் போலீசார் ஒட்டிச்சென்றனர்.

    Next Story
    ×