search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வு 30 மையங்களில் நடந்தது - பதிவெண் குளறுபடியால் சில இடங்களில் தாமதம்

    • இந்த ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ ஆகியவற்றின் முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
    • மாநகர பகுதியில் தேர்வு நடைபெறும் ஒரு சில மையங்களில் தேர்வர் களுக்கான பதிவெண்ணும், வினாத்தாளில் குறிப்பிடப்பட்ட எண்ணும் ஒத்துப் போகாததாக கூறி சிறிது நேரம் தேர்வு தாமதமானது.

    நெல்லை:

    இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், துணை பதிவாளர், நகராட்சி ஆணையர், துணை வணிக வரி அதிகாரி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பணி களுக்கான தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

    30 தேர்வு மையங்கள்

    இந்த ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ ஆகியவற்றின் முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடை பெறுகிறது. இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வுக் காக நெல்லை மாவட்டத்தில் 24 அமைவிடங்களில் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 5,070 பேர் விண்ணப்பித்திருந்த னர். முதன்மை தேர்வை யொட்டி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தமிழ் மொழி தகுதி தாளும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பொது தாளும் நடைபெறுகிறது.

    இதில் மாநகர பகுதியில் தேர்வு நடைபெறும் ஒரு சில மையங்களில் தேர்வர் களுக்கான பதிவெண்ணும், வினாத்தாளில் குறிப்பிடப் பட்ட எண்ணும் ஒத்துப் போகாததாக கூறி சிறிது நேரம் தேர்வு தாமதமானது.

    குளறுபடி

    பாளையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பதிவெண் குளறுபடி காரணமாக தேர்வு எழுதுவதில் குழப்பம் ஏற்பட்டு தேர்வர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர்.

    அதே நேரத்தில் சிறிது நேரம் தாமதமாக வந்ததாக கூறி நுழைவு வாயிலுக்கு வெளியே சுமார் 10-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து மாநகர தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ½ மணி நேரம் தாமதம்

    சுமார் ½ மணி நேர தாமதத்திற்கு பின்னர் தேர்வர்கள் அந்த மையத் திற்குள் அனுமதிக்கப்பட்டு தேர்வை எழுத தொடங்கி னர். அவர்களுக்கு தாமதத்தை ஈடு செய்யும் வகையில் கூடுதல் நிமிடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பாளையில் உள்ள பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை ஆய்வு செய்தார்.

    மாவட்டம் முழுவதும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய 31 வீடியோ கிராபர்கள், தேர்வினை கண்காணிக்கும் வகையில் 30 தேர்வு ஆய்வு அலுவ லர்கள் நியமிக்கபட்டு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்

    Next Story
    ×