என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
- சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
- புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் சிறப்பு திட்டம் 2022-23 கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய பொறியாளர் சுரேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்த வல்லி, ஊராட்சி செயலர் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






