search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும்  நாளை கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்
    X

    நெல்லை மாவட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்

    • நெல்லை மாவட்டத்தில் 204 கிராம ஊராட்சிகளிலும் நாளை காலை இக்கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
    • பொதுமக்களுக்கு விவரங்களை அளித்திட அனைத்து துறை அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காந்தி ஜெயந்தியான நாளை (2-ந்தேதி) நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணிக்கு நடத்தி அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறை வெண்வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஓன்றியங்களுக்குட்பட்ட 204 கிராம ஊராட்சிகளிலும் நாளை காலை இக்கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள், ஊராட்சியின் முந்தைய ஆண்டுக்கான அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

    மேலும் , அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்கு தேவை யான விவரங்களை அளித்திடவும் அனைத்து துறைகளின் அலுவலர்களும் இக்கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×