search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் பேரூராட்சியில் அரசு நூலகம் கட்டித்தர வேண்டும்- அமைச்சரிடம், எம்.எல்.ஏ. மனு
    X

    ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

    பாபநாசம் பேரூராட்சியில் அரசு நூலகம் கட்டித்தர வேண்டும்- அமைச்சரிடம், எம்.எல்.ஏ. மனு

    • பள்ளி கட்டிடத்தில் இயங்குவதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
    • நவீன வசதிகளுடன் நூலகத்துக்கு தனி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

    பாபநாசம் நகரில் தனி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பாபநாசம் வட்டார கல்வி அலுவலகம் பழுதடைந்த காரணத்தால் இடிக்கப்பட்டது. தற்போது பாபநாசம் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - வித்யா பாட சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.

    இந்த வட்டார கல்வி அலுவலகம் அந்த பள்ளி கட்டிடத்தில் இயங்குவதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    எனவே, ஏற்கனவே இடிக்கப்பட்ட பழைய இடத்திலேயே பாபநாசம் வட்டார கல்வி அலுவலகம் கட்டித் தர வேண்டும்.

    பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாபநாசம் ஒன்றியம் உம்பளப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாபநாசம் பேரூராட்சி வார்டு எண் 3 இல் உள்ள பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - கிழக்கு, ஆகிய பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும்,

    பாபநாசம் பேரூராட்சியில் பொது நூலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு அந்த பகுதி இல்லாததால், புதிய இடத்தினை தேர்வு செய்து நவீன வசதிகளுடன் நூலகத்துக்கு தனி கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் இராஜகிரி ஊராட்சியில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டிடமும், கணினி வசதிகள் உள்ளிட்ட உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×