search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாட்டில்  குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க. நிர்வாகி போல கவர்னர் செயல்படுகிறார்- தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தாக்கு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி. அருகில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

    தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க. நிர்வாகி போல கவர்னர் செயல்படுகிறார்- தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தாக்கு

    • தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர்.
    • தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்றது. பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்ச் செல்வி, முத்துராஜா, கமாலுதீன், தீபக்ராஜா, ஸ்டாலின், ஆரோக்கியராபின், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல சேர்மனுமான பாலகுருசாமி வரவேற்றார்.

    அமைச்சர் கீதாஜீவன்

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தலைமைக் கழக பேச்சாளர் போலீஸ் ஆல்பர்ட் தாஸ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினர். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    ரூ. 2 லட்சம் கோடி முதலீடு

    தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனங்கள் உற்பத்திகளை தொடங்கும் போது தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    நான் முதல்வன் திட்டத்தில் ஒரு மாணவன் என்ன படிக்க விரும்புகிறானோ? அதற்கு ஏற்ற தகுதியை உருவாக்க வழி செய்கிறது. தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் பா.ஜ.க.வின் நிர்வாகி போல செயல்படுகிறார். சாதி, மதத்தின் பெயரால் ஓட்டுக்களை பெற பா.ஜ.க. திட்டம் போட்டுகிறது.

    தமிழகத்தில் அனைவரும் அனைத்து மதத்தையும் வழிபட உரிமை இருக்கிறது. இந்தியாவின் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் சனாதன தர்மம் புதைக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டானின் தலைமையில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தை சின்னா பின்னமாக ஆக்கி வைத்திருந்தனர். அதனை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராகிய பின்னர் சீராக்கி 2 ஆண்டுகள் முடிந்து 3-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிருக்கிறார்.

    மாதம் ரூ. 1000

    படித்த மகளிருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைதொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏழை- எளிய மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 2,617 பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் சிறப்பான முறையில் அனைத்து வகையான வளர்ச்சிபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, சிங்கப்பூரைப் போல தூத்துக்குடியையும் மிகச்சிறந்த நகரங்கமாக உருவாக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.

    கூட்டத்தில் மாநகர தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், மற்றும் மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வட்ட செயலாளர்கள் செல்வராஜ், நடேசன் டேனியல், கந்தசாமி, விஜயகுமார், பிரசாந்த், சக்திவேல், முள்ளக்காடு கிளை செயலாளர் பக்கிள்துரை, சில்வர் சிவா, பொட்டல்காடு கிளைச் செயலாளர் சந்தனராஜ், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மகளிர் அணி அமைப்பா ளர் ஜெயக்கனி விஜயகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×