என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்ற காட்சி.
உடன்குடி சிவலூரில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி புதிய கட்டிடங்கள்
- சிவலூர் அரசுப்பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டதால் அதனை புதுப்பித்து கட்ட வேண்டும் என அந்த பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.28லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி யூனியன் செட்டியாபத்து ஊராட்சி மன்றம் சிவலூர் அரசுப்பள்ளி கட்டிடம் சிதில மடைந்துகாணப்பட்டதால் அதனை புதுப்பித்து கட்ட வேண்டும் என அந்த பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.28லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதிய கட்டிடங்கள் கட்டிட கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பள்ளிகட்டிடங்கள் கட்டுவதற்கு அளவீடு செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனை ஊராட்சிதலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி தலைமைஆசிரியை பவுலா ராதிகா, ஆசிரியை ராதை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






