என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர் மயங்கி விழுந்து சாவு
- அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
- திடீரென மயக்கம் ஏற்பட்டு இறந்துள்ளார்.
நெல்லை:
பாளை கே.டி.சி. நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னிருகை பெருமாள். இவரது மனைவி ஆனந்தி தேவி (வயது 53).
இவர் சீவலப்பேரியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த இவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Next Story






