என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் டி.வி. தாசில்தாரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் அரசு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் போராட்டம்
- அரசு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் அரசு செட் டாப் பாக்ஸ்கள் உள்ள நிலையில், இதில் 50 ஆயிரம் பாக்ஸ் மட்டுமே இயங்கி வருகிறது.
சேலம்:
தனியார் நிறுவன மென்பொருள் சேவைகள் தடை பட்டதால் அரசு கேபிள் டி.வி. நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் நடத்தினர்.
அப்போது கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மென்பொருள் சேவை கள் வழங்கி வந்த தனி யார் நிறுவனத்தின் மென்பொ ருள் சேவைகள் திடீரென தடைபட்டதால் கடந்த 3 நாட்களாக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவை கள் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் அரசு செட் டாப் பாக்ஸ்கள் உள்ள நிலையில், இதில் 50 ஆயிரம் பாக்ஸ் மட்டுமே இயங்கி வருகிறது. மற்ற செட் டாப் பாக்ஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றனர்.
இந்த போராட்டத்திற்கு சேலம் அருள் எம்.எல்.ஏ ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில், சேவை பாதிப்பால் அரசு கேபிள் டி.வி. நிறுவ னத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும். அதே போல் வாடிக்கை யாளர்கள் தனியார் கேபிள் மற்றும் டி.டி.எச்.க்கு மாறி விடுவார்கள் என்றார்.






