search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில் நகைகள் வாங்குவது போல் நடித்து தங்க நகைகள் கொள்ளை
    X

    கும்பகோணத்தில் நகைகள் வாங்குவது போல் நடித்து தங்க நகைகள் கொள்ளை

    • கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும், கடை உரிமையாளரையும் திசை திருப்பி உள்ளனர்.
    • கண்காணிப்பு கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அவர்கள் நகைகள் திருடியது தெரிய வந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பெரிய கடை தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு நகைகடைக்கு நகைகள் வாங்குவது போல மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள் நகைகள் வாங்குவது போல ஒவ்வொரு நகைகளையும் எடுத்து பார்த்துள்ளனர். கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் மற்றும் நகைக்கடை உரிமையாளரையும் திசை திருப்பி உள்ளனர்.

    பின்னர் ஊழியர்களை உரிமையாளரையும் ஏமாற்றி விட்டு கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்க காசு, தங்க மோதிரம் அடங்கிய 134 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    அவர்கள் சென்ற பிறகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து அவர்கள் நகைகள் திருடி செல்வது தெரிய வந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் பாபு கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    தகவலறிந்த சம்பவத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் மற்றும் காவல்துறை யினர்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து தப்பியோடிய கொள்ளையர்கள் தனிப்படை வைத்து தேடி வருகின்றனர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் 134 கிராம் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×