என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவி, பன்னீர்செல்வம்.
திருக்கோவிலூர் அருகே நள்ளிரவில் அரசு பஸ்சின் கண்ணாடி உடைப்பு; டிரைவருக்கு கொலை மிரட்டல்
- பஸ்சை வழிமறித்த 2 பேர் அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தனர்.
- டிரைவரிடம் தகராறில் ஈடுபட்ட ரவி, பன்னீர்செல்வம் தனியார் பஸ் ஊழியர்கள் என தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
திருப்பதியில் இருந்து செங்கோட்டை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று திருக்கோவிலூர் வழியாக சென்றது. இந்நிலையில் திருக்கோவிலூர் - உளுந்தூர்பேட்டை செட்டித்தாங்கல் பகுதி அருகே வந்தது. அப்போது அதே பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பஸ்சை வழிமறித்த 2 பேர் பஸ் டிரைவரிடம் தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அரசு பஸ்ஸின் கண்ணாடியையும் உடைத்தனர். இது குறித்து அரசு பஸ் டிரைவர் செல்வம் (வயது 44) கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் விரைந்து சென்று அரசு பஸ் டிரைவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த மற்றும் அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்த காட்டுஎடையார் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி (34) மற்றும் பணப்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த அய்யனார் மகன் பன்னீர்செல்வம் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அரசு பஸ்சை வழிமறித்து, கண்ணாடியை உடை த்து டிரைவரிடம் தகரா றில் ஈடுபட்ட ரவி, பன்னீர்செல்வம் தனியார் பஸ் ஊழியர்கள் என தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் திருக்கோவிலூர் கோர்டடில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






