search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடற்கரையில் போடப்படும் குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்கள் அழிகின்றன
    X

    தில்லைவிளாகம் கடற்கரை பகுதியில் மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.

    கடற்கரையில் போடப்படும் குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்கள் அழிகின்றன

    • முத்துப்பேட்டை தாலுகா தொண்டியக்காடு, தில்லைவிளாகம் கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் பணி நடந்தது.
    • கடற்கரை பகுதிகளில் போடப்படும் குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்கள் அழிகின்றன.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ஓசோன் தினம் மற்றும் சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள், பள்ளிகல்வித் துறை இணைந்து முத்துப்பேட்டை தாலுகா தொண்டியக்காடு, தில்லைவிளாகம் கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் பணி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார்.

    திருவாரூர் மாவட்ட சுற்று ச்சூழல் உதவி பொறியாளர் விஜயகுமார், தில்லைவிளாகம் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன், பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராசேந்திரன் வரவேற்றார். தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் மாயகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி மாணவ மாணவி களின் விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணியை துவக்கிவைத்து முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி பேசும்போது ஓசோன் என்ற வாயுமண்டலம் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதா கதிர்களை பூமிக்கு வராமல் தடுத்து மனிதனையும், உயிரினங்களையும் காக்கிறது, பல்வேறு காரணங்களால் அதில் ஓட்டை விழுந்துள்ளது, சுற்றுச்சூழலை காப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியும்,

    கடற்கரை பகுதிகளில் போடப்படும் குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்கள் அழிகின்றன. கரைக்கு முட்டையிட வரும் ஆமைகள் வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன.

    இதனால் உயிர் பன்மயம் பாதிக்கப்ப டுகிறது எனவே நீர் நிலைகளில் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று தூய்மை பணியை மேற்கொண்டனர் கிழிந்தவலைகள், பிளாஸ்டிக், மரத்துண்டுகள், பழைய துணிகளை சேகரித்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பிறகு சுற்றுசூழல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியை தேசிய பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர் நடனம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பசுமைத் தோழர் பேகன் ஜமீன் ஆகியோர்

    ஒருங்கிணைத்தனர்.மாவட்ட சுற்றுச்சூழல் மன்றங்க ளின் ஒருங்கிணை ப்பாளர் முத்துக்குமார் நன்றி கூறினார். தொண்டியக்காடு கீழ வாடியக்காடு பள்ளி மாணவ மாணவிகள் தூய்மை பணியில் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×