என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே கஞ்சா விற்றவர்கள் கைது
    X

    கோப்பு படம்

    தேனி அருகே கஞ்சா விற்றவர்கள் கைது

    • தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • பழனிசெட்டிபட்டி போலீசார் ரோந்து சென்றதில் கஞ்சா விற்றவர்களை கைது செய்தனர்

    தேனி:

    தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் பழனிசெட்டிபட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு சென்ற சிலம்பரசன்(33), பிரதீப்(27) ஆகியோரை மடக்கினர்.

    இதில் பிரதீப் தப்பிஓடிவிட்டார். சிலம்பரசனை போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கூடலூர் வடக்கு போலீசார் கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுடன்பட்டி விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த சந்தோஷ்(23), சிவனேந்திரன்(25), தெய்வம்(55) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×